Breaking News

ஊழல் மோசடியில் ஈடுபடுவோருக்கு ரவியின் பதவி விலகல் ஒரு பாடம்: பிரதீபன்

நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபடுவோருக்கு ரவி கருணாநாயக்கவின் பதவி வில கல் ஒரு பாடமாக அமைந்திருக்கி ன்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். 
ஹற்றனில் நேற்றுமாலை (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சி காலப்பகுதியில் இலங்கையை நல்லிலங்கையாக ஊழல் மோசடி அற்ற ஒரு நல்ல நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பது அவரின் எண்ணமாகும். 

இந்த வகையில் கடந்த ஆட்சியாளர்கள் செய்த ஊழல் நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டும் வந்தன. அதேபோன்று ஆளும் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக பதவி விலக்கல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் ஜனாதிபதியின் செயற்பாடாக உள்ளது. 

அது பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு எதிர்வரும் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு ரவி கருணாநாயக்காவின் பதவி விலகல் அமைந்தி ருக்கின்றது”