நீல திமிங்கிலத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்
நீல திமிங்கிலம் எனப்படும் இணைய விளையாட்டுக்கு அடிமையாகி மேற்கு வங்காளம் – மித்னாபூர் பகுதி யைச் சேர்ந்த 10ஆம் தர பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரஷ்ய நாட்டில் உருவான குறித்த இணை யத்தள விளையாட்டானது ஆன்லை னில் விளையாடப்படுவதோடு கொடுக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டு படிப்படியாக 50 கட்டங்கள் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.
நள்ளிரவில் பேய்படம் பார்ப்பது, கத்தி மற்றும் பிளேடால் கைகளை வெட்டிக்கொள்ளல் போன்ற பலவகை கட்டங்களை கடந்து 50ஆவது கட்டமாக விளையாட்டை விளையாடுபவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அத்தோடு அதனை ஆன்லைன் மூலமாக ஏனைய உறுப்பினர்களுக்கு பகீரவும் வேண்டுமென்ற வகையில் இந்த விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டு என பல நாடுகளில் குறித்த விளை யாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த விளை யாட்டு தற்போது வேகமாக பரவி வருகின்றது.
இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, கடந்த 29ஆம் திகதி மும்பையில் 14 வயது மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அங்கன் தே எனும் 10ஆம் தர மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
மேலும், உலகம் முழுவதும் இந்த விளையாட்டினால் 4 ஆயிரத்திற்கும் அதி கமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.