நேபாளத்தில் மண்சரிவு – 36 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடும் மற்றும்; இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவும் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சன்சாரி, சிந்தூலி, ஜஹாபா, மொராங் உள்ளிட்ட மாவட்டங்களியே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது இருப்பி டங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
மேலும், பிராட்நகர் விமான நிலையம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.