Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்றிலிருந்து உணவு தவிர்ப்பு போராட்டம்

வழக்கின் கால எல்லையை நீடிப்ப தன் மூலம் அரசியல் கைதிகளை பழி வாங்கும் செயலை கண்டித்து அனுரா தபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்றில்(20) இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை கடந்த வியாழக்கிழமை பார்வையிட சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேலிடமே மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். 

 அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்த வருடம் குறித்த வழக்கு நிறைவடையும் தறுவாயில் இருக்கும் நிலை யில் இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம், வேறு மாவ ட்டங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே மீண்டும் வேறு நீதிமன்றங்களுக்கு குறித்த வழக்கை மாற்றினால் முடி வில்லாமல் தொடர்சியாக இந்த வழக்கு இடம்பெறும்  தண்டனை இல்லாமல் தண்டனை கொடுக்கும் நடவடிக்கையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் திட்ட மிட்டுள்ளது. 

இது அரசியல் கைதிகளை பழிவாங்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்து, தமது வழக்கு வவுனியாவிலேயே நடைபெற வேண்டும் என்றும், வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது எனக“ கோரி மேற்குறித்த அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வரு கின்றது.