Breaking News

அனர்த்­தத்தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும்.

வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவால் பாதிக்­கப்­பட்ட மாத்­தறை மக்­க­ளுக்­காக 60 பில்­லியன் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. செப்­டெம்பர் மாதம் முடி­வ­டைய முன்னர் பிரச்­சி­னைகள் முழு­மை­யாக தீர்க்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அனர்த்­தத்தில் அழி­வுற்ற மொத்த சொத்­துக்­களின் பெறு­மதி 109 பில்­லியன் ரூபா எனவும் அவர் குறிப்­பிட்டார். அண்­மையில் தென்­னி­லங்­கையில் இடம்­பெற்ற அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மாத்­தறை மக்­களை நேற்று சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டுள்ளார். 

 மேலும் கூறு­கையில், அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரண நட­வ­டிக்­கைகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் அர­சாங்கம் அதிக அக்­கறை செலுத்தி அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

சேதங்­களை சரி­செய்யும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் பூர்த்தி செய்து வரு­கின்­றது. அதேபோல் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான பொரு­ளா­தாரத்தை முன்­னெ­டுக்கும் வகை­யிலும் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.

எனினும் பெரும்­பா­லான வேலைத்­திட்­டங்கள் நிறை­வுக்கு வந்­துள்­ளன. எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இந்த வேலைத்­திட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­படும். இந்த வேலைத்­திட்­டங்­களில் தாம தம் ஏற்­ப­டுத்தக் கூடாது. மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார மாற்று நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

அவர்­க­ளுக்­கான வியா­பா­ரங்­களை முன்­னெ­டுக்க நிதி உத­வி­களை வழங்க வேண்டும். இரண்டு வார காலத்­தினுள் இந்த நிதி உத­வி­களை அர­சாங்கம் வழங்கும். செப்­டெம்பர் மாதம் முடி­வ­டையும் போது மக்­களின் இந்த பிரச்­சி­னைகள் முழு­மை­யாக தீர்க்­கப்­படும். 

அதேபோல் அனர்த்­தங்­களின் போது பாது­காப்­பாக இருக்கும் வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். எனி னும் இம்­முறை மக்கள் பாதிக்­கப்­பட்ட போதும் அர­சாங்கம் சரி­யான முறையில் செயற்­பட்டு மக்­களை பாது­காக்கும் நட­வ­டி­கை­களை கையாண்­டது. 

அரச நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் பாது­காப்பு படை­களின் முழு­மை­யான ஈடு­பாட்டில் நாம் சரி­யாக செயற்­பட்டோம். கடந்த கால வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக நாம் இழந்த சொத்­துக்­களின் மொத்தப் பெறு­மதி 109 பில்­லி­ய­னாகும். இந்த 109 பில்­லியன் ரூபாவை நாம் எவ்­வா­றா­யினும் மீண்டும் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. 

2017 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்­டத்தில் 60 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்ளோம். ஒதுக்­கப்­பட்­டுள்ள இந்த நிதி­ முழு­மை­யாக பாதிக்­கப்­பட்ட மக்­களை சென்­ற­டைய வேண்டும். ஆகவே இது தொடர்பில் ஆராய வேண்டும் என நான் தெரி­வித்­துள்ளேன். 

சேத­ம­டைந்த வீடுகள், சொத்­துகள் தொடர்பில் உரிய மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கவே இந்த நிதித்­தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது. பாதைகள், மின் கம்­பங்கள், கிண­றுகள், பாட­சா­லைகள் என்­ப­வற்றை புனர்­நிர்­மாணம் செய்ய 30-35 பில்­லியன் ரூபாய் செல­வாகும்.

எவ்­வாறு இருப்­பினும் இழந்த சொத்­துக்­க­ளுக்­கான 109 பில்­லியன் ரூபா பெறு­ ம­தியை நாம் எந்த வழி­யி­லேனும் பெற் ­றுக்­கொண்டு முழு­மை­யான இந்த செயற்பாடுகளை கையாள வேண்டும். 

இப்போது நாம் 60 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு எஞ்சிய நிதியை நாம் ஒதுக்க முடியும். எவ்வாறு இருப்பினும் படிப்படியாக நாம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். மக்களின் பிரச்சினை களை விரைவில் தீர்க்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார்.