விரைவில் மஹிந்த தலைமையில் அரசாங்கம்: குமார வெல்கம உறுதி

பதுளை பசறையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் ”அரசாங்கத்தின் ஆயுள் முடிந்து விட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணியை அமைச்சர் ரவி கருணாநாயக்க அடித்துள்ளார்.
இனி புதைப்பது மாத்திரமே எஞ்சியி ருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம்.
அதற்கு ஜனாதிபதியின் ஆசி தேவையில்லை. எப்படியாவது 113 உறுப்பி னர்களை சேர்த்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் நாங்கள் பெரும்பா ன்மையை நிரூபிப்போம்.
அவ்வாறு நிரூபித்து நாங்கள் பிரதமரை தெரிவு செய்வோம். அதற்கு எவரது “ஆசிர்வாதமும் தேவையில்லை” என குறிப்பி ட்டுள்ளார்.