விரைவில் வெளியாகவுள்ளது ‘மத்திய சிறைச்சாலை’
நரசிம்ஹா புரடக்சன் தயாரிப்பில் இயக்குனர் அஜய் லெட்சுமியின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது ‘மத்திய சிறைச்சாலை’ திரைப்படம்.
ஈழத்தின் பல்வேறு கலைஞர்களின் ஒன்றிணைவில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிரதான வேடத்தில் கவிமாறன் சிவா நடிக்கின்றார். அவருடன் வாகீசன், கதிர், வின்சன் குரு, துவாரகன், சித்ரா, மித்ரா, சித்து என பலரும் நடிக்கின்றனர்.
ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர் சிவ பத்மயன் இத்திரைப்படத்திற்கும் இசையமைக்கின்றார். அண்மையில் வெளியான சண்டியன் திரைப்படத்தில் பத்மயனின் இசை பெரிதும் சிலாகிக்கப்பட்டது.
படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி மேற்கொண்டுள்ளதுடன், சசிகரன் யோ படத்தொகுப்பை கவனிக்கின்றார். படத்தின் ரீசரை அண்மையில் வெளி யிட்டுள்ள படக்குழு, விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.