Breaking News

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தை யில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

தமது ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதேவேளை, தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணா விரதப் போராட்டத்தினையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அங்கவீனமுற்ற இராணு வத்தினர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பி டத்தக்கது. 

மேற்படி போராட்டம் காரணமாக புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து செய்திகள் கிடைக்கின்றன.