அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்த முடியாது – ரிசாட் பதியூதீன்
அரசாங்கத்தின் பயணத்தை எவரா லும் தடுத்து நிறுத்த முடியாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக விவ கார அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரி வித்துள்ளார்.
113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு ந்தால் அரசாங்கத்தை முன்னெடுத்து ச்செல்ல முடியுமென குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அரசாங்கம் நீண்ட தூரம் பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனயில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்கவிற்கு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் இதுவரையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவி கருணாநாயக்க, புதிய கலாச்சாரத்தை உருவாக்கி தாமாகவே கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு பதவி விலகினார் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி யினரே அவருக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர் என சுட்டிக்காட்டிய ரிசாட் பதியூதீன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது தொடர்பில் பத்திரிகைகளின் வாயிலாகவே அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.