Breaking News

தியாகி திலீபனின் நினைவுத்தூபி நல்லூரில் மீள அமைக்கப்படவேண்டும்!

யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலின் பின் வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி மீளப் புனரமைக்கப்பட்டு, எல்லைப்படுத்த ப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இன்று காலை வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு இடம்பெற்று வரும் நிலையில் மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்தக் கோரிக்கையினை யாழ்ப்பாணம் மாநகர சபை யின் ஆணையாளரிடம் முன்வைத்துள்ளார். 

மேலும் இந்த விடயத்திற்கு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் "நான் மாநகர சபை ஆணையாளராக இருந்த போது குறித்த நினைவு தூபியை நிர்மாணித்து திறந்து வைத்தேன், அதற்காக என் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது” என்று மேலும் கூறியுள்ளார். 

தியாக தீபம் திலீபன் கடந்த 1987இல் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் வெளியேற்றம் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையான உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!