வடக்கு மாகாணசபையில் மோதிக்கொண்ட முதல்வர் – எதிர்க்கட்சித் தலைவர்!
வடக்கு மாகாண சபையின் அமர்வு தற்போது நடைபெற்றுவருகின்றது. அதில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், எதிர்க்க ட்சித் தலைவர் தவராசாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்றைய அமர்வில் வடக்கு முதலமைச்சர் கருத்துக்கள் தெரிவித்தார். “தனது கட்சியில் வேண்டத்தகாதவராக மாறியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அவைத் தலைவரின் சாதுரியத்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துள்ளார்.

ஊடகங்களில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக எம்மைக் கையாலாகாதவர்களாகக் காட்ட நினைக்கின்றார்.”- என்று வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
“தனது கட்சியின் வேண்டப்படாத நபராக மாறியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த தேர்தலில் ஆசனம் பெறுவதற்காக ஊடகங்களில் விளம்பரம் தேடுகின்றார்.”- என்றும் வடக்கு முதலமைச்சர் கூறினார்.
அதையடுத்து ஆசனத்தில் இருந்து எழுந்த வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா காரசாரமான கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தார். வடக்கு முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது.