பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மொழி வகுப்புக்கள் – மனோ கணேசன்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மொழி வகுப்புக்கள் நடத்தப்பட உள்ள தாக தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியையும், தமிழ் பாராளு மன்ற உறுப்பினர் சிங்கள மொழியை யும் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளு மன்றிற்கு தெரிவானதன் பின்னரே தாம் சிங்கள மொழியைக் கற்றுக்கொண்ட தாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டின் தலைவர்கள் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் நடந்து கொள்வதனைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மொழி வகுப்புக்களில் நடந்து கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பி ட்டுள்ளார்.








