Breaking News

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது 100 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடி ப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட தில் சுமார் 100 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 4ம் திகதி முதல் நேற்று வரையில் இந்த தேடுதல் நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் அடையாளத்தை உறுதி செய்யாத 31 மோட்டார் சைக்கிள்களும், மோட்டார் வாகனம் ஒன்றும், வான் ஒன்றும், லொறி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளில் இவ்வாறு சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக யாழ்ப்பா ணத்தில் நிலவிய சூழ்நிலையை கருத்திற் கொண்டு சுற்றி வளைப்பு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றன.