மஹிந்த மனநோயாளி என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு மனநோய் என்றே அமைச்சர்எஸ்.பி.திஸாநாயக்க அறிக்கை விடுத்துள்ளார். வெள்ளவத்தையிலுள்ள கண் வைத்தியசாலை ஒன்றினை மேற்பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வீட்டில் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றபோது சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்படுமா இல்லையா என்பது குறித்து பேசப்பட்டது.
அதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் வழங்குவதாக கோர ப்பட்டது.
அன்றைய கட்சியின் செயலாளராகவிருந்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடத்தில் அவசரமாக தலைமைத்துவத்தை மாற்றும் பத்திரத்தில் கைச்சாத்திடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
தற்போது தன்னை யாரும் விலக்கவில்லை. தானே கட்சியின் தலைவர் என்று கூறுகின்றார். இதனால் மனநோயாளி ஆகிவிட்டோரோ என்ற சந்தேகம் ஆரம்பித்துள்ளதனால்தான் அவரே வழங்கிய தலைமைத்துவத்தை தற்போது இல்லையென மறுத்து வருகின்றார்.