வடக்கின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய வருகிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்!
வடக்கின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு பய ணம்செ ய்யவுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 29ஆம் நாள்வரை வடக்கிற்கு பயணம் செய்யவுள்ள அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
லெப் ஜெனரல் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தார்.
இதன்போது வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை வடக்கின் நிலமைகளை ஆராய நேரில் வருமாறு லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட மகாநாயக்க தேரர் எதிர்வரும் 28,29ஆம் நாள்களில் வடக்கிற்குப் பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.