பதவி விலகுவது பிணைமுறி பிரச்சினைக்குத் தீர்வல்ல: அனுரகுமார
ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதால் மட்டும் பிணைமுறி தொடர்பான பிரச்சினைகள் தீராது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி விக்கையில், தொடரும் பிணைமுறி பிரச்சினைகள் குறித்து விசாரணை களை மேற்கொள்ளும் ஆணைக்குழு வினால் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் தம்மை நல்லாட்சி என அடையாளப்படுத்தி ஆட்சிசெய்யும் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.