திலக் மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதில் இணக்கம்?

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அர சாங்கத் தரப்புக்கள் இணங்கியுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி பிணை முறிமோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காரணமாக வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ரவி கருணாநாயக்க, நேற்றைய தினம் தனது பதவியில் இருந்து விலகி யிருந்தார். இந்த நிலையில் வெற்றிட மாகியுள்ள வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, திலக் மாரப்பனவை நிய மிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
முன்னாள் சட்ட மா அதிபரும், சட்டத்தரணியுமான மாரப்பன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசத்திற்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய மாரப்பன ஆவன்ட் சர்ச்சை காரணமாக பதவி விலகியிருந்தார் என்பதும்க குறிப்பி டத்தக்கது.
அமைச்சர்களான நவின் திஸாநாயக்க, சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும் வெளிவவிகார அமைச்சர் பதவிக்காக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது