80 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் விரைவில் நடவடிக்கை
80 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணை க்களம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
80க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்க ளுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட தன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் ஊழல் மோசடிகளில் ஈடு பட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகத் தெரி வித்துள்ளார்.







