ரசிகர்களை ஏமாற்றிய மரியா ஷரபோவா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து ரஷ்யாவின் நட்சத்திர வீரா ங்கனை மரியா ஷரபோவா பாதியி லேயே வெளியேறியுள்ளார்.
சின்சி ன்னாட்டி நகரில் நடைபெற்று வரும் ஏ.டி,பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் முதற் சுற்று ஆட்டங்களில் விளையாடிய மரியா இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அதனைத் தெராடர்ந்து காயத்தின் தீவிரம் குறையாததன் காரணமாக முழுத் தொடரில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
மரியா ஷரபோவா 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டித் தொடரில் சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டவர் என்பதோடு, ஊக்கமருந்து பாவித்த சர்ச்சையில் சிக்கி 15 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








