அரசாங்கம் ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்ள எனது குடும்பத்தை பயன்படுத்துகின்றது – மஹிந்த
அரசாங்கம் தனது ஊழல் மோச டிகளை மூடி மறைத்துக் கொள்ள தமது குடும்பத்தை பயன்படுத்திக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து ள்ளார். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவ ல்கள் அம்பலமாகத் தொடங்கியதும் தமது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணை நடத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கப்படு வதாகத் தெரிவித்துள்ளார். இதன் ஓர் கட்டமாகவே அரசாங்கம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவு ஆகியனவற்றுக்கு தமது குடும்ப உறுப்பினர்களை அழைத்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தனது மனைவி, இரண்டு புதல்வர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸக்களுக்கு எதிராக விசாரணை நடத்த விசேட நீதிமன்றங்களை அமைக்க உள்ளதாக அரசாங்கம் கூறுவதன் மூலம், அவர்கள் எவ்வளவு குழம்பிப் போயிருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது என அவர் குறிப்பி ட்டுள்ளார்.








