Breaking News

ட்ரவிஸ் சின்னய்யா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்

கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யாவை கடற்படைத் தளபதி யாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ்; அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன வின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் ட்ரவிஸ் சின்னய்யா இன்றைய தினம் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ட்ரவிஸ் சின்னய்யா பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்ப டுகிறது. 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் யுத்த கப்பல்களை அழித்தலில் சின்னய்யா முக்கிய பங்கினை வழங்கினார் என தெரிவிக்கப்ப டுகிறது. 

கடந்த அரசாங்கத்தினால் சின்னய்யா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட தாகவும் இதனால் உயர் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்ப டுகிறது. 

 ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்தினால் தற்போதைய கடற்படை தளபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானி த்துள்ளமை குறிப்பிடத்தக்கது