முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் ! - THAMILKINGDOM முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் ! - THAMILKINGDOM
 • Latest News

  முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் !

  சர்வதேச காணாமல் போனோர் தின த்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் (30) 176 நாட்களாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு முல்லைத்தீவு பிரதான பேரூந்து நிலை யத்திலிருந்து ஆரம்பான ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்ட போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்துள்ளது. 

  “தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா” காணாமல் ஆக்கப்பட்டவர்க ளுக்கு நீதியை வழங்கு”, இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளை கள் எங்கே??? ‘போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரி த்தனர்.

  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் ,புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top