ரவி நிரபராதியாகிவிட முடியாது.
விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததன் பின்னர் மீண்டும் ஊழல் மோசடிகள் தொடர்பில் சகல தரப்பினரும் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
இதில் ரவி கருணாநாயகாவை நியாயப்படுத்தும் அரச தரப்பு இந்த செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் அடையாளம் எனவும், மஹிந்த தரப்பினர் இதனை தமது வெற்றியாகவும் கூறிக்கொண்டுள்ளனர்.
குற்றம் புரிந்த நபருக்கு வேறு அடையாளம் கொடுப்பதால் குற்றத்தில் இருந்து அவர் விடுபடுவார் என்று அர்த்தப்படாது.
ஆகவே அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சில் இருந்த போது மேற்கொண்ட ஊழல் மோசடிகளுக்காக அவரை வெளிவிவகார அமைச்சிற்கு மாற்றுவதனாலோ அல்லது அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதாலோ அவர் நிரபராதி என்று ஒருபோதும் அர்த்தப்படாது.
அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமை ஊழல் மோசடிக்காக அவருக்கு கொடுத்த தண்டனை என்ற கருத்தை முன்வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி ஊழல் வெளிவந்த போதே அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு எதிராக பல்வேறு குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆறு மாத காலத்திற்காக வாடகை வீடு எடுத்தமையும் அதற்கான 14.5 இலட்சம் ன் ரூபா மாதாந்தமாக செலுத்தியமையும் இந்த காலத்தில் இடம்பெற்றது. இவர்கள் மத்தியில் கறுப்பு பணமே பரிமாற்றப்பட்டுள்ளது.
இவர்கள் பரிமாற்றிகொண்ட எந்த வர்த்தகம் தொடர்பிலும் சரியான உடன்படிக்கைகள் இல்லை. ஆகவே இந்த விடயத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை உதாராணமாக கொண்டு ஏனைய அமைச்சர்கள் செயற்பட வேண்டும் என அரசாங்கம் புகழாரம் சூட்டுகின்றது.
ஆனால் ரவி கருணாநாயகவை எவரும் உதாரணமாக கருத வேண்டாம். பாடசாலை மாணவர்கள் அவரை உதாரணமாக நினைக்க வேண்டாம்.
மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, அரச சொத்துக்களை சூறையாடி இந்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தவுடன் தப்பிக்க வேறு வழியில்லாது தனது பதவியில் இருந்து விலகிய நபரை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.
ஆகவே ரவி கருணாநாயக்க தொடர்பில் உடனடியாக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல் ரவி கருணாநாயக்க விடயத்தில் வெளிவந்துள்ள உண்மைகளின் பின்னணி மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கின்றார். ஆகவே இவர்களுக்கு இடையிலான தொடர்புகள், இந்த விடயத்தில் வேறு நபர்கள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று கொள்ளையர்களுக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பதில் அரசாங்கம் சிக்கலில் உள்ளது. கள்ளர் கூட்டணியை ஒழித்துவிட்டு மாற்றாக மீண்டும் கள்ளர்களை கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அமைச்சர் திலக் மாரப்பன இதற்கு நல்ல உதாரணமாவார்.
அதேபோல் முன்னைய ஆட்சியில் மஹிந்த ராஜபக் ஷ குடும்ப ஊழலிலும் உண்மைகளை மூடி மறைக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே பிரதான இரண்டு கட்சிகளும் முழுமையாக ஊழல் மோசடிகளை அடிப்படையாக வைத்தே ஆட்சி செய்து வருகின்றன.
அதேபோல் கொள்ளையர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தியாகிகளாக மாற்றப்படுகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் தியாகிகளாக மாறப்பாக்கின்றனர். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.
மக்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொண்டு மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.