வித்தியாவை கடற்படையினரே கொலை செய்ததாக சாட்சி! - THAMILKINGDOM வித்தியாவை கடற்படையினரே கொலை செய்ததாக சாட்சி! - THAMILKINGDOM
 • Latest News

  வித்தியாவை கடற்படையினரே கொலை செய்ததாக சாட்சி!

  சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையி னரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படு கொலை செய்தததாக இப்படுகொலையின் சந்தேக நபரான சுவிஸ்குமாரின் தம்பியான ம.சசீந்திரன் சாட்சியமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

  யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் ட்ரயல் அட்பார் முறையில் வழக்குத் தொடுநரின் சாட்சியப் பதி வுகள் நிறைவடைந்த நிலையில், எதிரிகளின் சாட்சியப்பதிவு நடைபெற்ற போது சாட்சியமளித்த முக்கிய குற்றவாளியென இனங்காணப்பட்ட சுவிஸ்குமாரின் தம்பியாரான ம.சசீந்திரன், சாரதாம்பாள், தர்சினி கொல்ல ப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் முன்னரும் இதனடிப்படையில் செய ற்பட்டதாக தெரிவித்துள்ளார்.  

  இக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுவதும் பகிரங்கமாக தெரியப்படுத்தி எமக்கு எதிரான எண்ணப்பாட்டை வளர்த்துவிடப்பட்டுள்ளது. 

   சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

  நாம் இந்தக் குற்றத்தைச் செய்யாததாலேயே உயிரோடு உள்ளோமென  அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வித்தியாவை கடற்படையினரே கொலை செய்ததாக சாட்சி! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top