வித்தியா கொலை வழக்கு : லலித் ஜயசிங்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலை
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட லலித் ஜயசிங்க இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ப்படவுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி குற்றப்புல னாய்வு பிரிவினரால் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க, அன்றைய தினமே கைதுசெய்யப்பட்டி ருந்தார்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் வித்தியா கொலை வழக்கில் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.
குற்றவியல் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைகளின் போது தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன், அது தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் ட்ரல் அட் பார் முறையில் நடைபெறுகின்றது.







