பெண்ணின் கை பேசியைத் திருடிய சிப்பாய் யாழில் கைது!
38 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வல்லவ பகுதியைச் சேர்ந்த மல்லவத்தகே றொசான் நிலாந்த என்ற (வயது 27) இராணுவ சிப்பாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் சென்ற புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த 38,500 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 700 ரூபா பணத்தையும் திருடியுள்ளார்.
திருடியதைக் கண்ட குறித்த பெண் பயணி புகையிரத பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கி ழமை (08) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்து வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்ப டுகின்றது.









