முதல்முறையாக இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ள அஸ்வின்!
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்ச த்திர சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் தட வையாக இப்பருவத்துக்கான இங்கி லாந்து கவுண்டி போட்டிகளில் விளை யாடவுள்ளார். பிரபல அணியான வொர்செஸ்டர்ஷயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு ள்ளார்.
இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்க ப்பட்டுள்ளதால் அவர் இம்மாத இறுதியில் இருந்து அவர் கவுண்டி போட்டி களில் விளையாடுவார் என இந்தியக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவுதிரேலிய அணியுடனான ஒருநாள் தொட ரிற்காக அஸ்வினுக்கு மீண்டும் நாடு திரும்பவேண்டும் என இந்திய தெரிவு க்குழு அறிவித்துள்ளதால், வொர்செஷ்டர்ஷயார் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








