Breaking News

பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும்

கடும்போக்­கா­ளர்­களான பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த மத தீவி­ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த பிக்­கு­களும், அந்த கொள்கை சார்ந்த அர­சியல் தீவி­ர­வா­தி­களும் ஏனைய மதங்­க­ளையும் அவற்றைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி வரு­கின்­றார்கள். 

சிறு­பான்மை மதங்கள் மீது குறிப்­பாக இஸ்லாம் மதத்தி ன் மீதும் முஸ்­லிம்கள் மீது ம் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இந்து மதத்தை அச்­சு­றுத்தி ஒடுக்­கு­வ­தற்­காக மென்­மு­றை­யி­லான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியத் தலைவர் வி.எஸ்.சிவ­க­ரனை பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் ஒக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­துள்­ளனர். 

 நாட்டில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக 1978 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்டு, 1979 ஆம் ஆண்டு தற்­கா­லி­க­மாக நடை­மு­றைக்குக் கொண்டு வரப்­பட்ட இந்தச் சட்டம் 1982 ஆம் ஆண்டு நிரந்­தர சட்­ட­மாக மாற்­றப்­பட்­டது. இதற்குத் துணை­யா­கவும், இந்தச் சட்­டத்தை மிகுந்த வலு­வோடு செயற்­ப­டுத்­து­வ­தற்­காக பின்னர் கொண்டு வரப்­பட்ட அவ­ச­ர­காலச் சட்டம் பேரு­த­வி­யாக அமைந்­தி­ருந்­தது. 

விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுதப் போராட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­பதில் இந்தப் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அவ­ச­ர­காலச் சட்­டமும் முழு வீச்சில் வரை­மு­றை­யற்ற அதி­கா­ரங்­க­ளுடன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. 

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­காக நடத்­தப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட இந்தச் சட்டம் குறிப்­பாக தமிழ் மக்­க­ளையே இலக்கு வைத்து செயற்­ப­டுத்­தப்­பட்­டது. 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த பின்னர், அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டது. ஆயினும் அந்தச் சட்­டத்தின் சில விதி­களை உள்­ள­டக்கி பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

மோ­சமான பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் எவ­ரையும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்க முடியும். இவ்­வாறு கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களை 18 மாதங்­க­ளுக்கு நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தாமல் விசா­ர­ணைக்­காக சிறைப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­ப­தற்கு இந்தச் சட்டம் வழி­வ­குத்­துள்­ளது. 

ஆனால் 18 மாதங்­க­ளுக்கு மேலா­கவும் பலர் இந்தச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டா­மலும், நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தா­மலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். 

அவர்­களில், வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டாமல், விசா­ரணை என்ற போர்­வையில் இன்னும் சிறைச்­சா­லை­களில் வாடு­ப­வர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதும், அவர்­களின் விடு­த­லைக்­கான கோரிக்­கை­களும் போராட்­டங்­க­ளும்­கூட இன்னும் அர­சாங்­கத்­தினால் புறக் ­க­ணிக்­கப்­ப­டு­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டார்கள் என்ற கார­ணத்­திற்­கா­கவும், அத்­த­கைய காரணம் தொடர்­பி­லான சந்­தே­கத்­திற்­கா­கவும், எவ­ரையும் கைது செய்து தடுத்து வைப்­ப­தற்கு இந்தச் சட்டம் பொலி­ஸா­ருக் கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அதி­கா­ர­ம­ளித்­துள்­ளது. 

சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் என்­பது அர­சுக்கு விரோ­த­மாக சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­வது கூட ஒரு குற்­ற­மாக இந்தச் சட்டம் வரை­ய­றுத்­துள்­ளது. அவ்­வா­றான குற்றச் செய­லுக்கு மரண தண்­டனை உள்­ளிட்ட கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­ப­டு­வ­தற்கும் இந்தச் சட்­டத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

இது மட்­டு­மல்ல, அந்தச் சட்­டத்தின் அதி­கா­ரங்­களும் செயற்­பாட்டு வலுவும் இன்னும் பல­வ­ழி­களில் மோச­மா­னவை அதன் கார­ண­மா­கவே பயங்­கரம் மிகுந்த பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் என்று அதனைக் குறிப்­பி­டு­கின்­றார்கள். இத்­த­கைய மோச­மான பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரே சிவ­க­ரனை விசா­ர­ணைக்­காக அழைத்­தி­ருக்­கின்­றார்கள். 

செயற்­ப­டாத சட்­டத்தின் செயற்­பா­டுகள் 'பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் மூலம் செய்­யப்­படும் விசா­ர­ணைக்­க­மைய' சுப்­பி­ர­ம­ணியம் சிவ­க­ர­னிடம் 'வாக்­கு­மூலம் ஒன்றைப் பெறு­வ­தற்­காக வேண்டி 2017.10.02 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் 2ஆம் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியைச் சந்­திக்­கும்­படி' சிவ­க­ர­னுக்கு தமிழில் எழு­தப்­பட்ட அழைப்­பா­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் நாட்டில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்ற கார­ணத்­தினால் அவ­ச­ர­காலச் சட்­டத்தை நடை­மு­றையில் வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை என தெரி­வித்து முன்­னைய அர­சாங்கம் அதனை நீக்­கி­யி­ருந்­தது. 

இருப்­பினும், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்று அரசு ஐ.நா. வின் மனித உரிமைப் பேர­வைக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் கூறி­யி­ருந்­தது. 

மனித உரிமை மீற­லுக்­கான பொறுப்பு கூறும் விட­யத்தில் ஐ.நா. மனித உரி மைப் பேர­வையில் இலங்கை அர­சாங்கம் தொடர்பில் கொண்டு வரப்­பட்ட இரண்டு பிரே­ர­ணை­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய நல்­லாட்சி அர­சாங்­கமும்கூட, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இப்­போது செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. 

அது செய­லற்­றி­ருக்­கின்­றது என்றே கூறி­யி­ருக்­கின்­றது. ஆனால் அந்தச் சட்டம் பல்­வேறு வழி­களில் நல்­லாட்­சி­யிலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது என்­பதே உண்­மை­யான கள நிலை­மை­யாகும். 

சிவ­க­ர­னைப்­போன்று எத்­த­னையோ பேர் பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டி­ருக்­கின்­றன. 

 பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் புதி­தாக வழக்குத் தாக்கல்......? 

அது மட்­டு­மல்­லாமல் எத்­த­னையோ பேர் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். 

அந்தச் சட்­டத்தின் கீழ் பல­ருக்கு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு வழக்­கு­களும் நடந்து வரு­கின்­றன. அதே­போன்று இரா­ணு­வத்தின் புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் தடுப்­புக்­கா­வலில் இருந்து விடு­தலை செய்­யப்­பட்டு அர­சாங்­கத்­தினால் 'சமூ­கத்தில் இணைக்­கப்­பட்ட' முன்னாள் போரா­ளி­க­ளான பலரும் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராகப் புதிய வழக்­குகள் இந்தச் சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரின் பிந்­திய நிலை­மை­யின்­படி 90க்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக நீதி­மன்­றத்­திற்குத் அதி­கா­ரி­க­ளினால் தகவல் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இதன்­படி வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ள­வர்கள் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களா அல்­லது புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளி­களா அல்­லது, அந்தச் சட்­டத்தின் கீழ் புதி­தாகக் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­வர்­களா என்­பது தெரி­ய­வில்லை. 

இந்தப் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மா­னது அப்­பட்­ட­மாக மனித உரி­மை­க­ளையும், மக்­களின் அடிப்­படை உரி­மை­க­ளையும் மீறிச் செயற்­ப­டு­வதைச் சுட்­டிக்­காட்டி, இந்தச் சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்­பதை ஐ.நா .மனித உரிமைப் பேர­வையும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கமும் சர்­தே­சமும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. 

அந்த வலி­யு­றுத்­தலை ஏற்­றுள்ள அர­சாங்கம் அந்தச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு இன்னும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. 

 விசா­ர­ணைக்­கான காரணம் முக்­கி­ய­மா­னது அந்தச் சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வாகப் புதி­தாக பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர­வுள்­ள­தாக அரசு உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்­றது. ஆனால் இந்த உறு­தி­மொ­ழியும் இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

புதிய சட்­டத்­திற்­கான வரைபு தயா­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், அது இன்னும் சட்ட அந்­தஸ்து பெற­வில்லை. 

புதிய வரை­பும்­கூட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திலும் பார்க்க மோச­மான முறையில் மக்­க­ளு­டைய அடிப்­படை உரி­மை­க­ளையும் மனித உரி­மை­க­ளையும் மீறும் வகை­யி­லேயே அமைந்­துள்­ள­தாகப் பலரும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்தப் பின்­ன­ணியில் மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியத் தலைவர் சிவ­கரன் மீது பயங்­க­ர­வாதத் தடைச்சட்டம் விசா­ரணை என்ற போர்­வையில் பாய்ந்­துள்­ள­மையை அர­சியல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

அவ்­வாறு நோக்­கு­வ­தற்கு சிவ­கரன் பெரிய அளவில் அர­சியல் ரீதி­யா­கவோ அல்­லது வேறு வகை­க­ளிலோ அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நபர் என்று அர்த்­த­மல்ல. ஆனால், அவர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­டு­வ­தற்­காக, அனு­மா­னிக்­கப்­ப­டு­கின்ற விடயம் இன்­றைய அர­சியல் சூழலில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. 

அதன் கார­ண­மா­கவே சிவ­க­ர­னுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­ன­ரு­டைய அழைப்­பாணை, மற்­ற­வர்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட அழைப்­பா­ணை­க­ளிலும் பார்க்க வித்­தி­யா­ச­மா­ன­தா­கவும் விசே­ட­மா­ன­தா­கவும் கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

திருக்­கே­தீஸ்­வரச் சூழலில் பௌத்த விகாரை மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் இந்து சம­யத்தின் தேவாரம் பாடப்­பட்ட காலத்­தி­லேயே முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தது. 

தேவா­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பதன் மூலம் அந்த ஆலயம், தொன்­மையும் வர­லாற்றுச் சிறப்பும் மிக்­கது என்று வர­லாற்று ஆசி­ரி­யர்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். 

அத்­த­கைய சிறப்­பு­மிக்க அந்த ஆல­யத்தின் சூழலில் யுத்த மோதல்­க­ளின்­போது, இரா­ணு­வத்­தினர் பெரும் எண்­ணிக்­கையில் நிலை­கொண்­டி­ருந்­தனர். 

 திருக்­கே­தீஸ்­வரம் பகுதி மக்­களும் ஏனைய மக்­களைப் போன்று உயி­ருக்குப் பாது­காப்பு தேடி இடம்­பெ­யர்ந்­தி­ருந்­த­தனால், அந்த ஆலயம் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்­தது. 

அப்­போது அங்கு இரா­ணு­வத்­தி­னரே தங்­க­ளுக்குத் தெரிந்த வகையில் மலர்­களை அர்ச்­சித்து வணங்கி அந்த ஆல­யத்தைப் பேணி வந்­துள்­ளார்கள். அதே­நேரம் திருக்­கே­தீஸ்­வரச் சூழ­லா­கிய மாந்­தையில் இரா­ணு­வத்­தினர் தங்­க­ளு­டைய வழி­பாட்­டுக்­கென ஒரு புத்தர் சிலையை நிறுவி வழி­பட்டு வந்­தனர். 

யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, திருக்­கே­தீஸ்­வரம் பகு­தியில் இருந்து அவர்கள் வெளி­யே­றி­ய­போது, அந்த புத்தர் சிலையை அவர்கள் தம்­முடன் எடுத்துச் செல்­ல­வில்லை. 

மாறாக அங்கு ஒரு பௌத்த பிக்­குவை தங்­கச்­செய்து அவ­ருக்கும் அந்த புத்தர் சிலைக்கும் பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக ஒரு சிறிய இரா­ணுவ முகா­மையும் விட்டுச் சென்­றி­ருந்­தார்கள். 

இந்த இடத்தில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான 10 ஏக்கர் காணியைக் கைப்­பற்றி இரா­ணு­வத்தின் பாது­காப்­புடன் புதிய பௌத்த விகா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

அந்த விகாரை செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி (நேற்று) ஜனா­தி­ப­தி­யினால் வைபவ ரீதி­யாகத் திறந்து வைக்­கப்­ப­டு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. 'கறுப்புக் கொடி­யேந்தி, முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்­துவோம்....' இந்தத் திறப்­பு­வி­ழா­வையும், அதில் ஜனா­தி­பதி கலந்து கொள்­வ­தையும் சிவ­கரன் வெளிப்­ப­டை­யா­கவே எதிர்த்­தி­ருந்தார். 

 இது குறித்து அவர் ஜனா­தி­ப­திக்குக் கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார்.

வர­லாற்றுப் புகழ் மிக்க திருக்­கே­தீஸ்­வரம் சூழலில் இச் செயற்­பாடு ஏற்­பு­டை­யதா, என அந்தக் கடி­தத் தில் அவர் ஜனா­தி­ப­தி­யிடம் வின­வி­யி­ருந்தார். அத்­துடன், '18.01.2012 அன்று பௌத்த மத அலு­வல்கள் திணைக்­களம் இந்த விகா­ரையின் பதிவை இரத்து செய்­த­துடன் கட்­டு­மா­னப்­ப­ணி­க­ளையும் நிறுத்­தி­யது. 

ஆனால் உங்கள் நல்­லாட்­சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்­கப்­பட்­டன. இது சட்ட விரோத ஜன­நா­யக மீறல் அல்­லவா? 

இதுவா நல்­லாட்சி? 

தமிழ் மக்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்­களில் கலா­சார மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி போலி­யான புனைவு பெயர்­களின் மூலம் பௌத்த மய­மாக்கல் வேலைத்­திட்­டத்தை முன்­ன­கர்த்­து­கி­றீர்­களா? 

சட்டவிரோ­த­மாக தனி­யா­ருக்கு சொந்­த­மான காணியில் அமைக்­கப்­பட்ட விகாரையை திறப்­ப­தற்கு தமிழ் மக்­களின் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யா­கிய நீங்கள் உங்­களை தெரிவு செய்த மக்­களின் விருப்­புக்கு மாறாக விழா­விற்கு வரு­வது தார்­மீக அடிப்­ப­டையில் நியாயம் தானா என்ற வினாக்­க­ளையும் தொடுத்­தி­ருந்த அவர்,

 'எமது நியாயபூர்­வ­மான வேண்­டு கோளை புறக்­க­ணித்து குறித்த திறப்பு விழா நடை­பெற்றால் ஜன­நா­யக ரீதியில் கறுப்புக் கொடி­யேந்தி முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்­துவோம் என்­ப­தையும் தங்­க­ளுக்கு வின­ய­மாகத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்' எனவும் சிவ­கரன் தனது கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார். 

இவ்­வாறு அவர் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்­த­தை­ய­டுத்தே அவரை பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் விசா­ர­ணைக்­காக அழைத்­துள்­ளார்கள். 

இந்த அழைப்­புக்கு முன்­ன­தாக அந்த விசா­ரணைப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் சிவ­க­ரனை பல தட­வைகள் தேடிச் சென்று விசா­ர­ணைகள் நடத்­தி­யதன் பின்பே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என அவர் உறு­தி­யாகத் தெரி­வித்­துள்ளார். 

இவ்­வாறு அவர் விசா­ர­ணைக்­காக கொழும்பில் உள்ள பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, அந்த பௌத்த விகா­ரையின் திறப்­பு­வி­ழா­வுக்கு ஜனா­தி­பதி வருகை தர­வில்லை என்ற தக­வலும் வெளி­யா­கி­யி­ருந்­தது. 

ஆயினும் அந்த விழாவில் பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கலந்துகொண்டிருந்தார். அர­சியல் முக்­கி­யத்­துவம் என்ன? இந்த நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. 

பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்கள் பின்­பற்­று­கின்ற மதம் என்ற கார­ணத்­திற்­காக ஏனைய மதங்­க­ளுக்கு உரிய வகையில் உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சி­ய­ல­மைப்பு கூறு­கின்­றது. 

ஆயினும், கடும் போக்­கா­ளர்­க­ளான பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த மத தீவி­ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த பிக்­கு­களும், அந்த கொள்கை சார்ந்த அர­சியல் தீவி­ர­வா­தி­களும் ஏனைய மதங்­க­ளையும் அவற்றைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி வரு­கின்­றார்கள். 

சிறு­பான்மை மதங்கள் மீது குறிப்­பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ்­லிம்கள் மீதும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இந்து மதத்தை அச்­சு­றுத்தி ஒடுக்­கு­வ­தற்­காக மென்­மு­றை­யி­லான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். 

இந்த நட­வ­டிக்­கைகள் நியா­ய­மற்­றவை, வெளிப்­ப­டை­யான குற்­றச்­செயல் சார்ந்தவை என்­பதைத் தெரிந்­தி­ருந்­தும்­கூட, நிறை ­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­திப­தியோ அல்­லது சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்குப் பொறுப்­பான அமைச்­சரோ அல்­லது பொலி­ஸாரோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குத் இது­வ­ரையில் துணிந்­த­தில்லை. 

இதன்மூலம் இந்த நாட்டின் சட்­டமும், நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய நிர்­வா­கமும் இந்த நட­வ­டிக்­கைகள் இயல்­பா­னவை, நியா­ய­மா­னவை என்­பதை ஏற்றுக் கொண்­டி­ருப்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­கின்­றன. 

அத்­து­மீ­றிய இந்தச் செயற்­பா­டு­களில் ஒன்­றா­கவே திருக்­கே­தீஸ்­வர ஆலயச் சூழலில் தனி­யா­ரு­டைய காணியில் பௌத்த விகாரை அமைக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ளது. 

இத­னையே சிவ­கரன் துணிந்து தனி­யொ­ரு­வ­ராக எதிர்த்­துள்ளார். இது­போன்ற அத்­து­மீ­றிய ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் நாட்டின் வடக்­கிலும் கிழக்­கிலும் பல இடங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. 

இடம்­பெற்று வரு­கின்­றன. அவற்­றுக்கு எதி­ராகக் குரல் எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. 

ஆனால், அவற்றில் இருந்து திருக்­கே­தீஸ்­வர பௌத்த விகாரை விவ­காரம் வித்­தி­யா­சப்­பட்­டி­ருக்­கின்­றது. கேள்­விக்­குறிக்கு ஆளாகும் எதிர்­காலம் நல்­லாட்­சியின் கீழ் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது, ஜன­நா­யக உரி­மைகள் பேணப்­ப­டு­கின்­றன என அர­சாங்கம் கூறு­கின்­றது. 

ஆனால் உண்­மையில் வடக்­கிலும் கிழக்­கிலும் தேசிய சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­க­ளி­னதும், முஸ்லிம் மக்­க­ளி­னதும் அர­சியல் உரி­மை­களும், அர­சியல் அந்­தஸ்தும், மத உரி­மை­களும் மத அந்­தஸ்தும் அடக்கி ஒடுக்­கப்­ப­டு­வ­தையும் அவர்­க­ளு­டைய தாயக மண் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வ­தை­யுமே காண முடி­கின்­றது.

இது இந்த நாடு சிங்­கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த அரசி யல் கோட்பாட்டை அடியொட்டி, இங்கு பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்றும், ஒற்றையாட்சியே இங்குள்ள ஆட்சி முறைமை என்றும், அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் அப்பட்டமான வெளிப் பாடு என்பதில் சந்தேகமில்லை. 

நீண்டகால அடிப்படையில் நேர்த்தியாகத்திட்டமிட்ட வகையில் முன்னெடு க்கப்பட்டுள்ள சிறுபான்மை இன மக்கள் மீதான இந்த அடக்குமுறையானது, தேசிய சிறு பான்மை இனங்களினுடைய குறிப்பாக தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. 

ஏனெனில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பிலும், ஒற்றையாட்சி என்பதும், பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்பதும் அடிப்படை விடய ங்களா கக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக் கப்பட்ட இறைமை சார்ந்த அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட ஓர் அரசியல் தீர்வையே ஏற்றுக்கொள்ளப் போவதாக சூளுரைத்துக் கொண்டிரு க்கின்ற தமிழ்த்த தேசிய கூட்டமைப்பின் தலைமையும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. 

இதன்மூலம் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கே முழு முதலான முன்னுரிமை என்ற கோட்பாடுகளை புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்வதற்கு ஏதுவா கவும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு அவர்களது அங்கீகா ரத்தைப் பெற்றுள்ளோம் என கூறுவதற்கும் வழிசமைக்கப்பட்டிருக்கின்றது. 

அது மட்டுமல்லாமல், ஒற்றையாட்சியை இறுக்கமாக வலியுறுத்துகின்ற ஏகிய ராஜிய என்ற சொற்பதமானது ஒருமித்த நாடு என்ற தழிழ்ச் சொல்லின் அர்த்தமாகும். 

அது, சமஷ்டி முறையிலான அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கோருகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்குப் பாதி ப்பை ஏற்படுத்த மாட்டா  என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியினரும் தமிழ் மக்கள் மத்தியில் விளக்க மளிக்க முற்பட்டிருப்பதும் அரசியல் ரீதியான வேடிக்கையாகவே இருக்கின்றது.