சமஷ்டி முறையிலான சுயாட்சி அவலங்கள் நிகழாமல் இருப்பதற்கே - விக்னேஸ்வரன்
மாணவி கிருஷாந்திக்கு ஏற்பட்டது போன்ற அவலங்கள் இனி மேலும் நடைபெறாமல் இருப்பதற்கே சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோரு வதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இராணுவத்தினரால் இழை க்கப்பட்ட குற்றச்செயல்களுக்கான அடையாளமாக கிருஷாந்தி குமாரசு வாமியின் பாலாத்காரமும் கொலை யும் அமைந்துள்ளதாக நிரூபித்துள்ளார். செம்மணி, அன்று ஒரு திறந்தவெளி கொலைக் களமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு போர்வை அணிந்த வர்களே பாரதூரமான குற்றச்செயல்களில் செயற்பட்டார்கள் எனவும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கிருஷாந்தி குமாரசு வாமியை நினைவுகூரும் நிகழ்வுகளும் செம்மணியில் ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தன.
கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அவர்க ளுக்கும் அஞ்சலி நிகழ்த்தப்பட்டு ள்ளது.
இவ்வேளை வறுமைக் கோட்டிற்கு ட்பட்ட பாடசாலை மாணவரகள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உரையை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வாசித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலி ஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளனர்.
1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலி ஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளனர்.
கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற அவரது தாயார் இராசம்மா, சகோதரர் பிரணவன் மற்றும் அயல்வீட்டு காரரான சிதம்பரம் கிருபா மூர்த்தி ஆகியோரையும் இராணுத்தினர் படுகொலை செய்தனர்.
சர்வதேசம் உத்தரவாதம் வழங்காததால் கிருசாந்தியின் படுகொலைக்கு நிகரான சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் மேலும் இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளதாக இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் அரச படையினரால் அரங்கேற்றப்பட்ட ஒவ்வொரு படு கொலைகளையும் ஒவ்வொரு தமிழனும் நினைவுகூர வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.