காணாமல் ஆக்கப்படுவோர் மீதான அனைத்துலக பிரகடன விவாதம் இரத்து!
பலவந்தமாக காணாமலாக்கப்படு வோர் அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலகப் பிரகடனம் மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதென அரசாங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
பலவந்தமாக காணாமலாக்கப்படுவ திலிருந்து அனைவரையும் பாதுகா க்கும் அனைத்துலகப் பிரகடனம் எதிர்வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துரைக்கப்பட்டதாகவும் எனினும் மற்றைய நாள் விவா தத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாதெனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை யிலான ஐதேக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பாகவும் விவாதத்திற்கு உள்ளடக்கப்போவதில்லையெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக வும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிறிலங்கா ஆட்சியா ளர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நியுயோர்க் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கூட்டு எதிரணியினருடனான சந்திப்பில் கல ந்ததாகவும், இவ்வேளை பலவந்த மாகக் காணாமலாக்கப்படுவதிலிரு ந்து பாதுகாக்கும் அனைத்துலகப் பிரக டனம் தொடர்பாக விவாதத்துக்கு எடு த்துக்கொள்ளப்போவதில்லையென தமக்கு உறுதிமொழி வழங்கியதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.









