Breaking News

போர்க் குற்றங்களை சரத் பொன்சேகா முன்வைத்தால் விடுதலை செய்யப்பட்ட 12,000 விடுதலைப் புலிகளும் கைது – சம்பிக்க ரணவக்க!

இராணுவ அதிகாரிகள் மீது போர்க்கு ற்றச்சாட்டுக்களை பரிசீலனைக்காக அழைத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 ஆயிரம் விடுதலைப் புலிகளும் கைதுசெய்யப்படவேண்டுமென மாந கர மற்றும் மேல் மாகாண அபிவி ருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  வன்மையாக  கண்டித்து ள்ளார். 

தமிழ் பத்திரிகைக்கு தகவல் வழங்கியபோது இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன், விநாயகம், அடேல் பாலசிங்கம் ஆகியோரும் புனர்வாழ்வளி க்கப்பட்ட 12,000 ஆயிரம் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையா? 

சரத்பொன்சேகாவின் தனிப்பட்ட ரீதியில் குப்பைகளைக் கிளறக்கூடாது. 

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம் தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்து விடக்கூடாது. 

இராணுவத்தினரின் போர்க் குற்றங்களை நிரூபிக்க பொன்சேகா விதி விலக்காகினால் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளை மீளவும் கைதாக்குவோம். 

மீண்டும்  இருண்ட யுகத்துக்குச் செல்ல வேண்டுமா? 

பொன்சேகா தனது நற்பெயரைக் கெடுத்து மற்றவர்கள் மீது விரல் நீட்ட க்கூடாது. மீதி நான்கு விரல்களும் தன்னைநோக்கியே இருப்பதை  மறந்துவிடக்கூடாது. 

இராணுவத்தினர்மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.