Breaking News

வடக்கு மக்கள் மீது குற்றச்சாட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக – பூஜித ஜெயசுந்தர!

வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதப் போராட்ட த்துடனானதாகவும்  மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயு தக் கலாச்சாரத்திலேயே. அம்மக்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்திய வர்கள். அதனால் தான் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் இடம்பெ ற்ற சம்பவங்களைக் கட்டுப்பாட்டு க்குள் கொண்டுவந்தேன் என சிறில ங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கில் நடைபெற்று வரும் சம்பவங்கள் சாதாரணமானவையா, பார தூரமானவையா என ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில ளிக்கையிலேயே கடந்த 30 வருடங்களான போரின் பின்னணி தொடர்பாக நாம் கரிசனை கொண்டால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு தற்போது ஒன்பது, பத்து வருடங்களே கடந்துள்ளன. 

நாம் சிந்திக்கவேண்டும். அங்குவாழும் பொதுமக்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ளும் முகமாக அனைவரும்  புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களா? 

இல்லை. 

மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்பு பட்டவையே. இந்த நிலமையை மாற்றுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்தேன். இது தொடர்பில் அறிக்கையிட்டேன். 

இது தொடர்பில் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளேன் அவர்களின் ஆலோசனைக்கமையவும், ஆயுதப் படையினருடனும் இணைந்து நிலமை யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன்.