Breaking News

மாணவி வித்தியா கொலையின் பின்ணணி ஜனாதிபதிக்கு தெரியுமாம் - அசாத் அலி!

மாணவி வித்தியா படுகொலை வழ க்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமாரின் விடுதலைக்கு உதவி யாக செயற்பட்டார் என்ற சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்ப ட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு பிணை வழங்க மறுத்து வருகின்றமை தொட ர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்ன ணியின் தலைவர் அசாத் அலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றியபோதே  இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நேர்மையான பொலிஸ் அத்தியட்சகர். அடுத்த பொலிஸ்மா அதிபராக நிய மிப்பதற்கு அவரே இருக்கிறார் என சுட்டிக்காட்டிய அவர் அந்தப் பதவிக்கு அவரை நியமிக்காமல் இருப்பதற்காகவே அவர்மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத்தி கைதுசெய்து விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்து நீதிமன்றம் பிணை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள மும், சட்டமா அதிபர் திணைக்களமும் இடையுறாக இருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சேவைக்காலத்தின் செய ற்பாட்டு வடிவத்தை கவனத்தில் எடுத்து அவருக்கு பிணை வழங்க வேண்டு மெனவும் கேட்டுள்ளார்.  

வித்தியா படுகொலைச் சம்பவத்தில் பாரிய மர்மம் இருக்கின்றதென்பதால் விசாரணைகள் சரியான முறையில் நடை்பெறுமென உறுதியாக கூற முடி யாதென தெரிவித்த அவர் வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பின்னணியில் இருந்து செ ற்பட்ட அரசியல்வாதிகள் யார்? 

இச் சம்பவத்தின் பின்னணி என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியு மெனவும் குறிப்பிட்டுள்ளார்.