Breaking News

நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டேன் – தலதா அத்துகோரள!

ஒருபோதும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டேன் – தலதா அத்துகோரள! 

நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மா ட்டேன் என 31.08.17 நீதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தலதா அத்து கோ ரள தெரிவித்துள்ளார். இவரே சிறில ங்காவின் முதலாவது பெண் நீதிய மைச்சரும் இவரே. 

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருந்த நிலையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, மைத்திரிபால சிறிசேனவினால் பதவி விலக்கப்பட்டபின் புதிய நீதியமைச்சராக தலதா அத்துகோரள பதவி யேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டை காப்பா ற்ற ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு பாதுகாப்புத் தரப்பினரும் சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல அரசாங்கம் தொடர்புபடாது. 

நாட்டின் சுயாதீன தன்மை பாதுகாக்கப்படும். நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்த பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரல தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.