Breaking News

ஜெனீவாவில் 36வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பம் !

இன்று ஜெனீவாவில்  ஐ.நா மனித உரி மைகள் பேரவையின் 36 ஆவது அம ர்வில் ஸ்ரீலங்கா தொடர்பான  விடயம் யாதும் பரிசீலனைக்கு உட்படுத்தப்ப டாத போதிலும், ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் நிலவரங்கள் சார்பாக அரசசார்பற்ற அமைப்புகளின் பக்க நிகழ்வுகளில் தொடரப்படவுள்ளது அதேநேரம், ஸ்ரீலங்காவின் மனித உரி மைகள் நிலவரம் தொடர்பாக கலந்தா லாசோசிக்கப்படும் பொருட்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் இது வரை 15 பக்க நிகழ்வுகள் ஆயத்தமாகியுள்ளன. அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்ட லுக்கான அமைப்பு, அனைத்துச் செயற்பாடுகளிற்குமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்திற்கு எதிரான சர்வதேச இயக்கம், பசுமை தாயகம் அமைப்பு உள்ளி ட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் பெற்ற அரசார்பற்ற அமைப்புக்களே ஸ்ரீலங்கா தொடர்பான  பக்க நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி யுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வு நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா தொடர்பில் அரசசார்பற்ற அமைப்புக்களின் பக்க நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென தெரிவாகியுள்ளன.