ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை - மாவை.சோ.சேனா­தி­ராஜா - THAMILKINGDOM ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை - மாவை.சோ.சேனா­தி­ராஜா - THAMILKINGDOM

 • Latest News

  ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை - மாவை.சோ.சேனா­தி­ராஜா


  முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத்தயார் சந்தர்ப்பத்தை குழப்பக்கூடாது என்கிறார் மாவை 

  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதி தீர்­வல்ல. எமது அடிப்­படைக் கோட்பா­டு­க­ளு டன் இணக்கம் காண்­ப­தற்கு மேலும் பல கட்­டப்­பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டி யுள்­ ளது என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ.சேனா­தி­ராஜா குறிப்பிட்டுள்ளார். 

  இணைந்த வடக்கு,கிழக்கில் உள்­ளக சுய­நிர்ணய அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­க­ளுக்­கான இறுதித் தீர்வு அமை­ய­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­ய அவர் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அல­கொன்­றினை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் தெரிவித்தார். 

  இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­துவம் குறித்து தனது மனக் கிலேச்­சத்­தி­னையே மஹிந்த வெளியிட்­டாரே தவிர அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு முழு­மை­யான எதிர்ப்­பினை அவர் காட்­ட­வில்­லை­யெ­னவும் குறிப்­பிட்ட மாவை எம்.பி., சர்வ­தே­சத்தின் ஆத­ரவு கிடைத்­துள்ள தற்­போ­தைய தரு­ணத்­தினை குழப்­பாது சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் கேட்­டுக்­கொண்டார்.
    
  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வௌிவந்­துள்ள நிலை யில் அது­கு­றித்து எழுந்து விமர்­ச­னங்கள், வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு எதி­ராக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களின் கருத்­துக்கள், இடைக்­கால அறிக்கை குறித்து முன்னாள் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடும் அவ­ரது அணி­யினர் தென்­னி­லங்­கையில் மேற்­கொள்ளும் பிர­சா­ரங்கள் தொடர்­பாக கருத்­துக்­களை முன்­வைத்த போதே மாவை.சோ.சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் குறிப்­பி­டு­கையில், யுத்­தத்­திற்கு பின்­ன­ரான ஒரு சூழலில் தமிழ் மக்­களின் நிலைமை மோச­மாக இருந்­தது. நீதி­வி­சா­ர­ணைகள் இன்­றிய நிலையில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்­ட­வொரு சமூ­க­மாக திட்­ட­மி­டப்­பட்ட வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

  அந்த நிலை­மைகள் தொடர்ந்தும் நீடித்­த­மை­யினால் எமது மக்கள் ஆட்­சி­மாற்­ற­மொன்­றினை எதிர்­பார்த்­தி­ருந்­தனர். அதே­போன்று தான் உலக ஒழுங்கில் ஏற்­பட்ட மாற்­றத்தின் கார­ண­மாக இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­ப­ட­வேண்­டு­மென்ற தோற்­றப்­பாடும் சர்­வ­தேச நாடு­களில் எழுந்­தி­ருந்­தது. 

  இவ்­வா­றான பின்­ன­ணியில் தான் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றி­ருந்­தது. அதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியும், சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை தோற்­று­வித்து ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்ந்­தார்கள். 

  தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கும், பொறுப்­புக்­கூறும் விடத்­திலும் உள்­நாட்­டிலும், ஐ.நாவிலும், சர்­வ­தே­சத்­திற்கும் வாக்­கு­று­தி­களை வழங் ­கி­னார்கள். அத­ன­டிப்­ப­டையில் முதற்­த­ட­வை­யாக தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான உரு­வாக்கச் செயற்­பா­டொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

  அந்த முற்­போக்­கான நட­வ­டிக்­கைக்கு நாமும் முழு­மை­யான பங்­க­ளிப்­பினைச் செய்­தி­ருந்தோம். இவ்­வா­றான நிலை­மையில் தான் தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்று வௌியா­கி­யுள்­ளது. 

  இந்த அறிக்­கையில் அனைத்து தரப்­பி­ன­ரி­னதும் முன்­மொ­ழி­வு­களும், இணக்­கப்­பாடு எட்­டிய விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இது இறு­தி­யான அறி க்கை அல்ல. 

  ஆகவே அந்த அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்ட விட­யங்­களை அல்­லது ஆலோ­சிக்­கப்­பட்ட விட­யங்­களை மைய­மாக வைத்து விமர்­ச­னங்­களை வௌியி­டு­வது தவ­றா­ன­தாகும். காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆரம்ப புள்­ளி­யொன்­றா­கவே நாம் இதனை பார்க்­கின்றோம். 

  இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­ய­வுள்ளோம். குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் ஆணையப் பெற்­றுள்­ளது. 

  இணைந்த வடக்கு கிழக்கில் உள்­ளக சுய­நிர்ண அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்­றையே எதிர்­பார்த்து அந்த ஆணையை எமக்கு மக்கள் வழங்­கி­யுள்­ளார்கள். ஆகவே எமது அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுடன் ஒப்­பீட்­ட­ளவில் பார்க்­கையில் இடைக்­கால அறிக்­கையில் மேலும் பல படிகள் முன்­னேற்றம் அடை­ய­வேண்­டி­யுள்­ளது. 

  அதி­கா­ரப்­ப­கிர்வு அதி­யுச்­ச­மாக இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்­பா­கான நாம் சகல தரப்­பி­ன­ரு­டனும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­ட­வேண்­டி­யுள்­ளது. 

  வடக்கு கிழக்கு இணைப்பு தனி­ய­லகு அமைக்­கலாம் மிக முக்­கி­ய­மாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் சம்­பந்­த­மாக நாம் சகோ­தர முஸ்லிம் கட்­சி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்றோம். 

  குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும் வகை­யி­லான தனி­ய­லகு ஒன்றை அமைக்கும் கோரிக்­கையை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. 

  அதனை வழங்­கு­வ­தற்கும் நாம் தயா­ரா­கவே உள்ளோம். இது சம்­பந்­த­மாக நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டனும் ஏனைய சில தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சுக்­களை ஏற்­க­னவே ஆரம்­பித்து விட்டோம். 

  அந்­தப்­பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்தும் இடம்­பெறும். நிச்­ச­ய­மாக இரு சமூகத்­திற்­கு­முள்ள ஐயப்­பா­டுகள் களை­யப்­பட்டு அவை ஆரோக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்­தினை அடையும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. 

  மஹிந்­த­வுடன் பேசி­யது இதுதான் இவ்­வா­றான நிலையில் அண்­மையில் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­டைய தயாரின் மர­ணச்­ச­டங்கில் கலந்­து­கொண்­டி­ருந்தேன். 

  இதன்­போது அங்கு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவும் வருகை தந்­தி­ருந்தார். அவர் என்­னி­டத்தில் வடக்கில் நிலை­மைகள் எவ்­வா­றுள்­ளன என்று விசா­ரித்­த­போது, நான் உங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விட சற்று முன்­னேற்றம் உள்ளது.  

  ஆனாலும் காணி­வி­டு­விப்பு உள்­ளிட்ட சில விட­யங்­களில் தாம­தங்கள் உள்­ளன என்று குறிப்­பிட்­டி­ருந்தேன். அத்­தோடு நிறுத்­தி­வி­டாது, அண்­மையில் எமது தலைவர் சம்­பந்தன் உங்­களை வந்து சந்­தித்­த­தையும் எங்­க­ளி­டத்தில் தெரி வித்துள்ளார். 

  புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் உங்­களின் ஒத்­து­ழைப்பு எமக்கு அவ­சியம் வேண்டும் என்றேன். இச்­ச­ம­யத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ, இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள இடம் சம்­பந்­த­மாக என க்கு விமர்­ச­னங்கள் உள்­ளன. 

  ஏனைய விட­யங்கள் தொடர்பில் பார்ப்போம் என்றார். அத்­தோடு எமது சம்­பா­சனை நிறை­வுக்கு வந்­தது. ஆகவே அவர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆத­ரவை வழங்க மாட்டேன் என்று ஒரு­போதும் கூறி­வில்லை. 


  எமது தலைவர் அவ­ருடன் தொடர்ந்தும் பேச்­சுக்­களை நடத்­த­வுள்ளார். அதே­போன்று அவர் தலை­மை­யி­லான அணி­யி­ன­ரு­டனும் பேச்­சுக்­களை நடத்­த­வுள்ளார். முரண்­பா­டுகள் குறித்து பேசுவோம் இவ்­வா­றி­ருக்­கையில் இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கட்­சி­களின், தனிப்­பட்ட நபர்­களின் பின்­னி­ணைப்பு குறித்து முரண்­பா­டுகள் பல காணப்­ப­டு­கின்­றன. 

  அவை குறித்து நாம் கலந்­து­ரை­யா­டல்­களை தொடர்ந்தும் செய்­ய­வுள்ளோம். ஏற்­க­னவே நாம் மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, போன்­ற­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்­களை தனித்­த­னி­யாக நடத்­தி­யுள்ளோம் அதே­போன்ற நட­வ­டிக்­கை­களை எதிர்­கா­லத்­திலும் தொட­ர­வுள்ளோம். 

  எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் தமிழ் மக்­க­ளுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் தங்­க­ளு­டைய விட­யங்­களை தாங்­களே கையா­ளக்­கூ­டிய வகை­யி­லாள அதி­யுச்­ச­மான அதி­க­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­பதே நிலைப்­பா­டா­க­வுள்­ளது. 

  ஆகவே அதற்­கு­ரி­ய­வா­றான நட­வ­டிக்­கை­களை நாம் நிச்­ச­ய­மாக முன்­ன­கர்த்­துவோம். சமஷ்டி சாத்­தி­யமே சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வு சாத்­தி­ய­மா­குமா என்ற சந்­தேகம் எழ­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 

  அண்­மையில் உச்­ச­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு எமது கோரிக்­கைக்கு வலுச்­சேர்ப்­ப­தாக உள்­ளது. 

  குறிப்­பாக நான் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த காலத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­பனக் கொள்­கை­யா­னது நாட்டை பிள­வ­டையச் செய்யும் வகையில் உள்­ளது என்று குறிப்­பிட்டு அடிப்­படை வாதக்­கு­ழு­வினர் வழக்குத் தாக்­குதல் செய்­தி­ருந்­தனர். 

  இவ்­வா­றான நிலையில் அண்­மையில் வௌிவந்த அவ்­வ­ழக்கு மீதான தீர்ப்­பா­னது எமது சமஷ்டிக் கோரிக்­கைக்கு வலுச்­சேர்ப்­ப­தாக உள்­ளது. அதே­போன்று கன­டாவின் கியூபெக் நகர மக்கள் உள்­ளக சுய­நிர்­ணத்­திற்கு உரித்­து­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். 

  ஆகவே அந்த உதா­ர­ணங்கள் எல்லாம் பிளவடையாத நாட்டிற்குள் அத்தகைய உரித்துக்களுக்கு தமிழ் மக்களும் ஏற்புடையவர்கள் என்பதை பறைசாற்று வதாக உள்ளது. 

  எனவே அதுபோன்ற உதாரணங்கள் எமது நியாயமான கோரிக்கை அடை வதற்கான கலந்துரையாடல்களில் முன்னேற்றங்களை காணப்பதற்கு வழி சமைப்பதாக  அமைந்துள்ளது. 

  சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தருணம் தற்போது உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

  அதனடிப்படையில் பார்க்கின்றபோது சர்வதேசம் தமிழர் தரப்புக்கள் சார்ப்பாக கவனத்தில் கொண்டிருக்கின்ற அதேநேரம், அரசாங்கத்தினை கையாளக்கூ டிய வகையிலும் அவர்களின் நகர்வுகள் அமைந்திருகின்றன. 

  ஆகவே இத்தகைய ஒரு தருணம் எதிர்காலத்தில் தொடர்ந்தும் நீடிக்குமா என்பது சந்தேகமானது. ஆகவே இரண்டு கட்சிகள் ஒன்றாக இருக்கின்ற சந்த ர்ப்பத்தில் சர்வதேசத்தின் கரிசனை அதிகமான உள்ள தருணத்தில் எமது நியா யமான இலக்கினை அடைவதே புத்திசாதுரியமான விடயமாகும். 

  அதனை விடுத்து இச்சந்தர்ப்பத்தினையும் குழப்பியடித்த பின்னர் எதிர்கால த்தில் எவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்பதை கூறமுடியாது என்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை - மாவை.சோ.சேனா­தி­ராஜா Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top