Breaking News

காணாமல்போனோர் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு - ரணில் விக்கிரமசிங்க

2015ஆம் ஆண்டிலிருந்து கடத்தப்படுப வர்களுக்கு எதிராக சர்வதேச சட்ட த்தில் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ள து. எனவே, 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் எத னையும் கவனத்தில் கொள்ளப்பட மா ட்டாது.

இக்கால கட்டத்திற்கான சம்பவங்கள் அனைத்தையும் விடுதலைப் புலி களே செய்துவிட்டு பழியை இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  குற்றம் சாட்டியுள்ளார்.     

இது தொடர்பில் பெல்பிதிகம தேசிய பாடசாலையின் புதிய கட்டடமொன்றை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே சிறலங்காப் பிரதமர் கருத்துரைத்து ள்ளார்.

கடத்தப்பட்டு காணாமல்போனோர் பிரச்சினை இன்று முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. யுத்தத்தின் முடிவின் பின்னரும், நல்லாட்சி அரசாங்கத்தி லும் விசாரணைகளை முன்னெடுக்க பல ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளன. 

மேலும் பலவந்தமான ஆட்கடத்தலுக்கெதிரான சர்வதேச சட்டத்தில் சிறில ங்கா 2015ஆம் ஆண்டே கைச்சாத்திட்டுள்ளது.  

அதன் 13-6ஆவது சரத்தில் குறித்த சம்பவத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட தினத்திலிருந்தே அச்சட்டம் செல்லுபடியாகும். எனவே இதனை கருத்திற்கொ ண்டு யுத்தகாலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முடியாது. 

மேலும் போர் நடைபெற்ற காலத்தில் பெருமளவான கடத்தல் சம்பவங்களை புலிகளே செய்துள்ளனர். 

அத்துடன் ஒருசில தனியார் குழுக்களும் செயற்பட்டுள்ளன. 

அவை யெல்லாவற்றையும் இராணுவத்தினர்மீதே சுமத்தி வந்துள்ளனர். 

பல வந்தமான கடத்தலுக்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டம்கொண்டு வர ப்பட்ட காலத்தில் நடைபெற்ற எச் சம்பவத்தையும் விசாரிக்கவோ, தண்டனை வழங்கவோ முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.