ஜெனீவாவில் இலங்கை நிலவரம் தொடர்பாக - உயர்ஸ்தானிகர்
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்ப டுத்தியிருக்கும் காணிகளை விடுவி த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு இலங்கை அரசா ங்கத்தை வலியுறுத்தி, ஐக்கிய நாடுக ளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானி கர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியபோது, தனது வாய்மூல அறிக்கையை, உயர்ஸ்தானிகர் உரைத்தார்.
ஒவ்வொரு நாடு பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திய இவர், இலங்கை சம்பந்தமாகவும் தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தினார். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினதும் மீறல்கள் இடம்பெற்றுவதாக கூறப்படுகின்ற கருத்து குறித்து, இலங்கையால் குறிப்பி டத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், உலகளாவிய நீதித்துறை யின் பயன்பாடு என்பது, மேலும் அவசியப்படுத்தப்படுகிறது என்று, அவர் இங்கு தெரியப்படுத்தியுள்ளார்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பாகவும், தனது கவனத்தைச் செலுத்தினார். “வடக்கில், பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ள ப்படும் போராட்டங்கள், சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் காணப்படும் மந்த நிலைமையை வெளிப்படுத்துகின்றன” என தெரிவித்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி, நிலைபேறுகால நீதிப் பொறிமுறையைக் கொண்டுவருமாறு, அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மனித உரிமைகள் பேரவையைச் சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக, அரசாங்கத்தால் பார்க்கக்கூடாது என்று குறிப்பிட்ட பொழுது, மாறாக, அனைத்து மக்களின் உரிமைகளை வழங்குவதற்கான நடவடிக்கையாக அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “காணாமல் போனோருக்கான அலுவலகத்தை, விரைவில் நடைமுறைப்படுத்துமாறும், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடு ப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் காணப்படும் வழக்குகளைத் தீர்த்தல் போன்ற, நம்பிக்கையைக் கட்டியெழுப்பு வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
“சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு ஒத்திசைகின்ற வகையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றான சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டுமென்ற எனது கோரிக்கையை, நான் மீள வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் காணப்படும் வழக்குகளைத் தீர்த்தல் போன்ற, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். “சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு ஒத்திசைகின்ற வகையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமொன்றைக் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை, நான் மீள வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.