மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை
அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்
மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களுக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்குமிடையிலேயே 40 நிமிடம் வரையில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நேற்று ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மத்திய மாகாணத்திற்கான நெடுஞ்சாலை அமைக்கும் விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
நெடுஞ்சாலைகள்
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் செயற்பாடு தொடர்பிலும் நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்தும் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அதனை மறுக்க முடியாது.
அவர் அபிவிருத்தி பணிகளை செய்யவில்லை என்று கூற முடியாது. ஆனாலும் அபிவிருத்தியுடன் இணைந்து பெரும் ஊழல்களை அவர் மேற்கொண்டார். அதேபோன்ற நிலைமை தற்போது தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கடும் தொனியில் கூறியுள்ளார்.


பிரதமர் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மத்திய மாகாண நெடுஞ்சாலைக்கு ஜப்பான் நிதி உதவி செய்வதால் அந்த நாட்டின் நிறுவனத்திற்கே இதற்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கவேண்டியுள்ளது என்று விளக்கியுள்ளார்.
ஆனாலும் இந்த ஒப்பந்தம் ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றுக்காக அல்லது அரசாங்கத்திற்கா வழங்கப்பட்டுள்ளது என்றும் சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது அமைச்சர்களான

இதனையடுத்து இந்த விடயத்தில் தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினை நிறுத்த முடியாது.
ஆனாலும் அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் இவ்விடயம் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடுவது என்றும் இந்த ஒப்பந்தம் தொட ர்பான முழுமையான விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.