Breaking News

சிங்கள அரசியல் தலைவர்களின் கதவுகளைத் தட்டிய மனச்சாட்சி !

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குறை பாடு தடையாக அமைந்ததென்பதை முக்கியமான சிங்கள அரசியல் தலை வர்கள் விளங்கிக்கொண்டதாக நாடா ளுமன்றத்தின் 70 ஆம் ஆண்டு நிறை வை முன்னிட்டு நேற்று செவ்வா ய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு அம ர்வில் கலந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர்  மனம் திறந்துள்ளனர். ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையில், மனச்சாட்சி வெளியாக வில்லை. ஆனால் புதிய அரசியல் யாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யதாக நாடாளுமன்ற  முக்கிய உரைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

70 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட நம்பிக்கை என்பது சிங்கள சமூகத்துக்கு வெட்கக்கேடானது என்ற தொணியில் பிரதமர் ரணில் மற்றும் அனுரகுமார திஸாநாயக்காவின் கூற்றுகள் வெளியாகியுள்ளன.

இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா தலை மையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்றத்தில் வழ ங்கிய தீர்வுத் திட்டத்தை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகி த்த தற்போதைய பிரதமர் ரணில் கசக்கி யெறிந்தார். 

ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது. அதேபோன்று 2005ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைத்த சுனாமி நிவாரணத்துக்கான பொது க்கட்டமைப்பு ஆலோசனைக்கு ஜே.வி.பி அன்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. 

நோர்வேயுடன் நடைபெற்ற சமாதான ஏற்பாடுகளை ஜே.வி.பி எதிர்திருந்த து. புலிகளுடன் எவ்வாறு பேச்சு நடத்த முடியுமென அனுரகுமார திஸாநாயக்கா அன்று நாடாளுமன்ற த்தில் கேள்வி எழுப்பியிருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

குறிப்பாக நேற்று அனுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையில் ஜனநாய கத்தின் மறுப்பினால் யுத்தம் தொடங்கியதாகவும் யுத்தத்தினால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டதாக இல்லையென்றார். 

ஆகவே 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், அவருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஞானம் எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு ஒன்றை ஏற்படுத்த வழி சமைக்க வேண்டும் என பலரும் எதிர்க்கின்றனர். 

ஆனால் வெறுமனே வழமையான நாடாளுமன்ற பேச்சுடன்  கருத்துக்கள் நின்று விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமெனவும்  குறிப்பி ட்டுள்ளார். 

அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப்பிரச்சினை தீர்க்கப்படா மல் இருப்பதன் வலியை தனது உரையின் ஒவ்வொரு சொற்களிலும் வெளிப்ப டுத்தியதாக கூறிய, அனைத்துக் கட்சிகளும் தவறு செய்துள்ளன என்ற தொணியில் தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆகவே 30 ஆண்டுகால யுத்தம் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குரியது. அது பயங்கரவாதம் அல்ல என்று தமிழ்தரப்பு காலம்காலமாக சொல்லி வந்ததை இப்போதுதான் சிங்கள அரசியல் தலைவர்கள் உணர்த்துள்ளனர் போன்று தெரிகின்றது. 

எவ்வாறாயினும் தமது மனச்சாட்சியை தொட்டுப் பேசிய இந்த அரசியல் தலைவர்கள் தமிழர்களின் சுயமரியாதையை காப்பாற்றக்கூடிய குறைந்த பட்ச அரசியல் தீர்வுக்கு உடன்படுவார்களா என்பதை காலம்தான் தெரிவிக்க வேண்டும். 

 இந்த சிறப்பு அமர்வில் உரையாற்றிய சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராகவே உரையாற்றியுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற நிலை யில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் இழைத்த தவறுகளை தனது உரையில் சரியான முறையில் குறிப்பிடவில்லை.