வித்தியா படுகொலைத் தீர்ப்பிற்கு செவ்வி வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால !
புங்குடுதீவு மாணவி வித்தியா படு கொலை வழக்கில் குற்றவாளிகளு க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சார்பாக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் தெரி வித்துள்ளார்.
நேற்றையதினம் அனைத்துலக சிறு வர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா வின் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன இந் நிகழ்வுகள் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் கலந்துரையாற்றியிருந்த ஜனாதிபதி, வித்தியா வழக்கின் தீர்ப்பு குறித்தும் முதன்முதலாக கருத்து வெளியிட்டிருந்தார்.
“பாடசாலைகளில் சிறுவர்களுக்கு உள்ள பாதுகாப்பு வீடுகளில் உள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
சிறுவர் தினத்தில் எமது பிள்ளைகளுக்காக ஆன்மீக ரீதியான சமூகத்தை உருவாக்குதலுடன் மேலும் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழ க்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந் நாட்டின் மிக முக்கியமான தீர்ப்பென எடுத்துரைத்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்பதுடன் அனைத்திற்கும் மேலாக மதி க்கப்படவேண்டிய தீர்ப்பாகும்.” என செவ்வி வழங்கியிருந்தார்.
வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் அனைவருக்கும் கடந்த மாதம் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதாய விளக்கத் தீர்ப்பாயத்தினால் மரணதண்டனை என தீர்க்கப்பட்டது யாவரும் அறிந்த உண்மையே ஆகும்.
தீர்ப்பு தொடர்பாக நாட்டின் பல்வெறுபட்ட பிரமுகர்களும் தமது கருத்துக்க ளினை முன்னிலைப்படுத்திய நிலையில் முதன்முதலாக தீர்ப்பு குறித்து மைத்திரிபால சிறிசேன தனது கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிட த்தக்கதாகும்.