அரசியல் தீர்வை வழங்க கட்சிகளின் உதவியை நாடுகின்றார் - ரணில்
60 ஆண்டு காலமாக தீர்க்காதிருக்கும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒத்து ழைப்பு நல்க வேண்டுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகாலத்தை கொண்டாடுகின்ற தினத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க முடியாமையிட்டு தான் கவலையடைவதாகவும் பிரதமர் கூறினார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அமர்வில் கலந்த ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தனது உரையில் தெரியப்படுத்தியுள்ளார்.
“இந்நாட்டில் செழிப்பும், சௌபாக்கியமும் ஏற்படும் என்று எதிர்பார்த்தே இந்த சபையில் நான் யோசனையை முன்வைத்தேன். நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்களாகியதை முன்னிட்டு பெருமைகொள்கின்ற அதேவேளை கவலைக்கிடமான விடயமாக தெரியப்படுத்தியுள்ளார்.
1947ஆம் ஆண்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனத்தாரும் இலங்கையர்கள் என்றே பயணத்தை ஆரம்பித்தோம். இந்த 60 வருடங்களில் எமது நாட்டில் இனப்பிரச்சினையும், ஆயுதப் பிரச்சினையும், பிரிவினைவாதமும் காணப்பட்டது.
ஆனாலும் நாங்கள் இவற்றிலும் ஜனநாயகத்தை பாதுகாத்தோம். எனினும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வும், ஐக்கியமும் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது கட்சி முறையில் அல்லது அரசியல் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளாகும்.
எனினும் செழிப்பும், சௌபாக்கியத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டு மென்றால் எமது நாட்டின் பிரதான பிரச்சினையாக இருக்கின்ற இனப்பி ரச்சினைக்கு அரசியல் தீர்வே வேண்டும்.
அரசியலமைப்புச் சபையாக நாடாளுமன்றத்தை மாற்றி, வழிநடத்தல் குழு விலுள்ள உறுப்பினர்களது கருத்துக்களை ஒன்றிணைத்து அரசியல் தீர்வை வழங்கும் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இதில் நாங்கள் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நாட்டு அரசியல் கட்சிகளல்ல, அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதியும் அர்ப்பணிப்பு டன் செயற்படுகின்றார்.
எமது நாட்டில் விரைவான அபிவிருத்தியை எட்டுவதற்கு, அரசியல் தீர்வை வழங்கவும் எமது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கிடைத்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.










