ஐ.தே.கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் அவரது மனைவியாரும் கைது
திவுலபிட்டிய, துனகஹா, பல்லபான வீதி யின் ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் நடை பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தைய டுத்து மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ வும் அவரது மனைவியும் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
திவுலபிட்டிய, துனகஹா, பல்ல பான வீதியின் ஹேன்பிட்டகெதர பிரதே சத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் கொள்ளையாளர்கள் சிலருக்குமிடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த துடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இச் சம்பவத்தையடுத்து மேல் மாகா ண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உட்பட 7 பேர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து வத்தைளையிலுள்ள குறித்த மாகாண சபை உறுப்பினரின் வீட்டை சோத னையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்து 115 தோட்டா க்கள், குண்டுதுளைக்காத அங்கி மற்றும் கைத்துப்பாக்கி வைக்ககப்பயன்ப டுத்தும் உறை அகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து வீட்டிலிருந்த மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிக்கோவின் மனைவியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கொள்ளையிடும் நோக்கில் குழு ஒன்று பிரவேசிக்கவிருப்பதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
இதற்கு அமைய வேன் ரக வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் அதில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது அதிரடிப்படையினர் பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.
இதில் மரணித்தவர் நாவலகே குசான் தக்சில குரே என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.









