சைட்டம் நிலைப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் - ஜனாதிபதி
சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் சவா ல்களுக்கும் பேச்சுவார்த்தையின் மூ லம் தீர்வுகாண முடியுமென ஜனா திபதி மேலும் தெரிவித்தார்.
தெஹி யோ விட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவா ராம விகாரையில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டுள்ள தங்க வேலியை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று கலந்து உரையாற்றும் போதே ஜனா திபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கு பிரிவினை தடையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்ப டும் பிரச்சினைகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரிந்து நிற்காது அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நாட்டை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு வதற்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும் கிராம சக்தி மக்கள் இயக்கம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி,
இந்த அபிவிருத்திப் பணிகளுடன் இணைந்து கிராமங்களையும் நாட்டையும் அபிவிருத்திசெய்வதற்கு பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் திம்பிரிபல அபிநவாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, சமயக் கிரியைகளில் கலந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட தன் பின்னர் தங்கவேலியை திறந்துவைப்பதற்கான நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்துள்ளார்.
சமுர்த்தி பெறுவோர், விசேட தேவையுடையவர்கள், உயர்கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு ஒருகோடி நாற்பது லட்சம் ரூபா இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.
தெஹியோவிட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராமாதிபதி சங்கைக்குரிய உடகம தம்மதிலக நாயக தேரரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச மகா நாயக தேரரினால் விசேட அனுசாசன உரை நடாத்தப்பெற்றது.
மகாசங்கத்தினர், அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.








