யாழ். மாவட்டத்தில் மிருகப் பலிக்கு நீதிபதி இளஞ்செழியன் தடை விதித்துள்ளார் !
யாழ். மாவட்டத்திற்குட்பட்ட ஆலயங்களில் மிருகபலி (வேள்வி) க்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தடைவிதித்துள்ளார்.
ஆலயங்களில் மிருக பலியிடல் வழி பாட்டு முறைமைகளை தடைசெய்ய கோரி இந்து மகா சபையினர் சட்ட த்தரணி வி.மணிவண்ணன் ஊடாக யாழ்மேல் மேல்நீதிமன்றில் நீதிப் பே ராணை மனுத் தாக்கல் அளித்துள்ள னர்.
வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழி யன் முன்னிலையில் கடந்த 2016 ஆம்ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 திகதி முதல் நடை பெற்று வந்தது. அன்றைய தினம் முதல் இதுவரை கால பகுதியில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு இடைக்கால தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருந்த நிலையில் நேற்று முற்றாகத் தடைவிதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கருத்துத் தெரிவி க்கையில்,
300 ஆண்டுகளாக பாரம்ப ரியமாக மிருக பலியிடல் வழிபாட்டு முறைமை இருப்பதாக கூறப்படு கின்ற போதிலும் அதற்கான அனுமதி யினை இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் உள்ளது. இந்து ஆலயங்களில் பூஜை வழிபாட்டுக்கு இறைசிக்கடை சட்ட த்தின் கீழ் அனுமதி பெறப்பட்டு உள்ளது.
இதற்கு உள்ளூராட்சி சபைகள் அனு மதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது அதிகார துஸ்பிர யோகம் ஆகும்.
ஏனெனில் இந்து ஆலயத்தில் 5ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் பேர் வரையில் கூடும் இடத்தில் 200 தொடக்கம் 500 வரையிலான ஆடுகள் மற்றும் கோழி களை வெட்டி சாய்த்து பலியிடுதல் மிருக வதை செயற்பாடு என்பது குறிப்பி டத்தக்கது.
அதற்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி அளித்துள்ளது.
சமய விழாக்களுக்கு அனுமதி வழங்கும் போது இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க கூடாது.
சமய விழாக்கள் சட்டத்தின் கீழேயே அனுமதி வழங்க வேண்டும்.
வீடுகளில் கொண்டாட்டங்களின் போது விருந்துக்காக ஒரு சில விலங்குகளை வெட்டு வதனை வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியும்.
அதற்காக நல்லூர், தலதா மாளிகை கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய ங்களில் சமய வழிபாட்டு முறை என மிருக பலியிடலை மேற்கொள்ள அனுமதி கோரினால் அனுமதி வழங்க முடியுமா?
எனவே யாழ்.மேல் நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட இந்து ஆலயங்க ளில் பூஜைகளின் போதோ வேறு சந்தர்ப்பங்களிலையோ மிருகங்களை பலி யிட கூடாது என தடை விதிக்கப்படுகின்றது.
அதற்கு எந்த உள்ளூராட்சி சபைகளும்இ நீதவான் நீதிமன்றங்களும் அனுமதி வழங்க கூடாது. அதனையும் மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொ ண்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முடியும்.
முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக குற்றமிழைத்தவர் கைது செய்ய ப்பட்டு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட வேண்டுமென எச்சரித்துள்ளார்.
அத்துடன் இந்த தடையுத்தரவை உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராக முதலமைச்சர் உள்ளமையினால், முதலமைச்சருக்கும், வடமாகாண சுகாதார அமைச்சருக்கும், மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.









