Breaking News

ஜனவரி 27இல் உள்ளூராட்சித் தேர்தல் தீர்மானம்!

உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரி மாதம் 27இல் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பெற்றது. சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று உள்ளூராட்சித் தேர்தல் ரீதியாக அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசி யக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவி பி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்ற னர். இந்தக் கூட்டத்திலேயே ஜனவரி 27ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஜனவரி மாதம் தெரிவிக்கப்படுமென உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா  குறிப்பிட்டுள்ளார்.