புதிய அரசியலமைப்பை செயற்படுத்த த.தே.கூ இதய சுத்தியுடன் பங்கேற்பு !- சம்பந்தன்
சமகால அரசாங்கத்தின் புதிய அரசிய லமைப்பை செற்படுத்தும் செயற்பா ட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட்டுக்கொ ண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவ ரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறி ப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜய த்தில் ஈடுபட்டுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனு க்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டு ள்ளார். அதிகாரப்பகிர்வின் தேவை குறித்து 1957 ஆண்ட முதல் பேசப்படு கின்றது.
கடந்த 30 வருடகாலமாக இது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதை இச் சந்திப்பின் மூலம் எதி ர்க்கட்சித் தலைவர் நிரூபித்துள்ளது டன் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினாலேயே முதல்முறையாக அதிகா ரப்பகீர்வு அரசியல்யாப்பு ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்தே பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகால வன்முறைகளினால் 50 வீதமான இலங்கைத் தமிழ் மக்கள் நாடு கடந்து வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்கா ட்டியதுடன், தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணத் தவறும் பட்சத்தில்
மேலும் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையேற்படுமெனவும் புதிய அரசமைப்பில் பிரிவினையைத் தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்பட்டு ள்ளமையால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதனை நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லையெனக் குறி ப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள், இந் நாட்டின் பிரஜைகள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடியவாறான ஓர் அதிகாரப் பகிர்வினையே வலியுறுத்துகின்றோம்.
இலங்கை தொடர்பில் மேலும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டில் ஈடுபடுமெனவும் உறுதி தெரிவித்த பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட், புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்டுடன், சிறிலங்காவுக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரிட்டன் அகாரிகளும் பங்கே ற்றுள்ளனர்.










