தனித்து ஆட்சியமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை - ஐக்கிய தேசிய கட்சியுடன் !
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வில க்கி, தனித்து ஆட்சியமைக்க பிரதமர் ரணில் விக்கரமசிங்க முன்னேற்பா ட்டை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொல நறுவை மாவட்ட கலந்துரையாடலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் பொலநறுவை மாவட்ட செயற்பாட்டாளர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்ததுடன் செயற்பாட்டாளர்க ளின் கருத்துக்களை கேட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில் செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.
தனித்து ஆட்சி அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பிரச்சி னைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதுடன் நல்லாட்சி அர சாங்கம் 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ள வேண்டிய தேவை குறித்தும் பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
புதிய யாப்பில் பௌத்த சமயத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்றும் ஒற்றையாட்சித் தன்மை மா றுபடவில்லையெனவும் புதிய யாப்பு க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெ னவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பாட்டாளர்கள் மத்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தில் கலந்தாலோசித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமென்ற யோசனையை விவரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாரா குமாறும் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரியப்ப டுத்தியுள்ளார்.









