Breaking News

கோத்தாபய இராணுவ முகாமை அகற்றினால் எலும்புத் துண்டுகள் வெளியாகலாம் – சீமான்!

கோத்தாபய இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 
இந்நிலையில், இறுதி யுத்தம் இட ம்பெற்ற இப்பகுதி மர்மம் நிறைந்த பகுதியாக இருக்கலாமென பல தரப்பி னர்களும் சந்தேகித்துள்ளனர். தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அப்பிர தே சத்தை மக்களின் பாவனைக்கு விடு வித்தால் மக்கள் தமது தேவைகளு க்காக நிலத்தினை பயன்படுத்தும்போ து எலும்புக் கூடுகள் வெளிவர வா ய்ப்புக்கள் அதிகமுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தில் இராணு வத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அனைவரும் இப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம். இதன் விளைவாக இன்னும் பல இரகசியங்கள் வெளிவர சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.