ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போ ?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந்திகதிக்குள் இடம்பெறுமென தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்து இருந்தது.
ஆனால் தொகுதியில் கோடிக்கணக்கான பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் குறித்து எந்த தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோ ர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இவ் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை யிலான அமர்வு, ஆர்.கே.நகரில் டிசம்பர் 31-ந்திகதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12-ந்திகதி இமாசல பிரதேச தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி யும், டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியுமெனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குஜராத் மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட ஏ.கே.ஜோதியிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஏ.கே.ஜோதி பதிலளிக்கும் போது, ‘ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் பின்னர் தனியாக தெரிவிக்கப்படும்.
டிசம்பர் 31-ந் திகதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை யாவரும் அறிந்தது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த முடிவுகள் எப்போது வெளியாகும்?
என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இந்த விவகாரம் விசாரணையில் இருப்ப தால் அது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாதென தெரிவித்து ள்ளார். .







